Header Banner Advertisement

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஹபீஸ் சயீத் மீண்டும் கைது


terrorist abbas syed

print

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில் மீண்டும் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளான்

பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோரை கொலை செய்தனர்

இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்திய ஹபீஸ் சயீத்தின் .லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறான்

இந்த சுழலில் ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டான்

இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இ ந்த சுழலில் மூன்று தினங்களில் அவரது வீட்டுக்காவல் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடையும் நிலையில் இருந்த போது வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீட்டிக்க மறுத்து அதனை நீதிபதிகள் ரத்து செய்து அவனை விடுதலை செய்தனர்

இந்த சுழலில் அவனை விடுதலை செய்ததற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றும்,அமெரிக்கா எச்சரித்திருந்தது; மத்திய அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹபீஸ் சயீதை, பாக்., அரசு மீண்டும் கைது செய்துள்ளது.