Header Banner Advertisement

திறந்தவெளியில் போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனையில் 80 ஆயிரம் பேர் பங்கேற்பு


Bangladesh Pray Pope Francis

print
வங்காளதேசம் நாட்டுக்கு நேற்று வந்த போப் பிரான்சிஸ் டாக்கா நகரில் உள்ள சுஹ்ராவார்டி உட்யன் பூங்காவில் இன்று மாபெரும் ஜெபக் கூட்டத்தை நடத்திய போது 16 பேரை பாதிரியார்களாக்கி ஆசீர்வதித்தார். இந்த ஜெப கூட்டத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 
முஸ்லிம், இந்து, புத்த, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மக்களுக்காக இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் போப் பிரான்சிஸ், அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் தலைவர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்
 
அதன் பின்னர் டாக்காவில் உள்ள வாட்டிகன் தூதரகத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து ரோஹிங்கியா அகதிகளின் புணர்வாழ்வு தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.