Header Banner Advertisement

மணல் கொள்ளையன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு !


Sand robbery Karur jail Thug act

print

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கருப்பத்தூர் கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில்  ஒருவருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பதற்காக வருவாய்த் துறையினருடன் இணைந்து அம்மாவட்ட போலீசார் தீவர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர் .இதுநாள் வரை மணல் திருட்டில் ஈடுபட்ட 331 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய 200லாரிகள் 5 டிராக்டர்கள் 15 ஜேசிபி.,, ஹிட்டாச்சி இயந்திரம் 1 ., இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் 88 மாட்டு வண்டிகள் கைப்பற்றப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை கருப்பத்தூரில் வசித்து வந்த கருப்பத்தூர் கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் ( வயது 47) தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ராஜசேகரன் அம்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜிடம் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி கோரி இருந்தார் .

இந்த சுழலில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கருப்பத்தூர் கோபாலை ஆட்சியர் கோவிந்தராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தார் . அதன் அடிப்படையில் லாலாபேட்டை காவல் நிலையத்தினர் கருப்பத்தூர் கோபால் மீது வழக்கு பதிவு செய்து அவரை மாவட்ட நீதிமன்றதில் இன்று ஆஜர் படுத்தினர் .

அப்போது கோபாலை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் . அதன் அடிப்படையில் கருப்பத்தூர் கோபாலை போலீசார் கரூர் மாவட்ட சிறையில் அடைத்தனர் . சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பத்தூர் கோபால் மீது கொலை., கொள்ளை.,திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பளார் ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்