மாணவர்களுக்கு தமிழக கல்வித்துறை புதிய விதிமுறைகள் விதிப்பு !


Untitled

print

 

பிறந்த நாளாக இருந்தாலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சீருடை கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், வருட விடுமுறைக்கு பின் பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன.

மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தமிழக கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது :-

பிறந்த நாளாக இருந்தாலும், சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். விடுப்பு எடுப்பதாக இருந்தால், பெற்றோர் கையெழுத்தோடு, வகுப்பு ஆசிரியரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என, 11 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லுாரி மாணவர்களை போல, மேல்நிலை வகுப்பு மாணவர்களும், முறுக்கு மீசை வைத்து, கடுக்கன் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து மீறும் செயலாகும். இதனால், மாணவர்கள் சீருடை அணியும் முறை, இறுக்கமில்லாத அரைக்கை சட்டை மட்டும் அணிதல், தலைமுடி வெட்டுதல், கைகளில் ரப்பர் பேண்டு, செயின் அணிந்து பள்ளிக்கு வருவது தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேற்படியான தமிழக கல்வித்துறை அறிவித்துள்ள நெறிமுறைகளை பள்ளி தலைமையாசிரியர்கள்  மாணவர்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றனர்.  விதிமுறைகள் மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.