Header Banner Advertisement

முஸ்லிம்களை இந்தியா பராமரிக்க வேண்டுமென ஒபாமா வலியுறுத்தல்


Obama

print

இந்தியர்களாக தங்களை அறிவித்துக் கொண்ட முஸ்லிம்களை இந்தியா பேணி வளர்க்க வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்

புதுதில்லியில் பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய தலைமையாளர்கள் கருத்தரங்கில் நேற்று பங்கேற்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது :-

தனது அதிபர் பதவி காலத்தில் இருமுறை இந்தியாவுக்கு வந்துள்ளேன் .

இந்தியா மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை ஒருங்கிணைந்த நாடு. இங்குள்ள முஸ்லிம்கள் தங்களை இந்தியர்களாகக் கருதக்கூடியவர்கள். இது துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் கைகூடுவதில்லை.

இப்படி இந்தியர்களாக தங்களை அறிவித்துக் கொண்ட முஸ்லிம்களை இந்தியா பராமரித்து, செழிப்பூட்ட வேண்டும். எனவேதான் இந்தியா அத்தகைய முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். எப்போதும் இதனை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன் என்று
ஒபாமா பேசினார்