Header Banner Advertisement

யோகா தியானம் இசை மூலம் கிடைக்கும் பலன்


VILLANGASEITHI

print

எப்பொழுதும் யாரைபற்றியாவது அவதுறு பேசிகொண்டேயிருப்பது… அடுத்தவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கவனித்துகொண்டேயிருப்பது.. குறைகூறுவது.. குற்றம் கண்டுபிடிப்பதே குறியாயிருப்பது…

யாரை பார்த்தாலும் நிறுத்தி சம்மந்தமில்லாமல் யாரை பற்றியாவது வதந்தி பேசுவது… சம்மந்தபட்ட இருவரிடையே எதையாவது பேசி பிரச்சனையை ஏற்படுத்தி..அதை வேடிக்கை பார்ப்பது…

யாராவது மதித்து எதையாவது சொன்னால் டிஸ்கஸ் செய்தால் அல்லது ஒரு கருத்து கேட்டால் கிடைத்தது வாய்ப்பு என்று அவர் மனம் நோக எதையாவது சொல்லி அவர் காரியத்தையே கெடுத்துவிடுவது…

வீட்டிலோ சுற்றத்திலோ அமைதி நிலவினால் டென்ஷனாகி…எதையாவது புரளி உண்டுபன்னி நிம்மதியடைவது…

இதெல்லாம் மனநல பிரச்சனைகளேதான்….. இதற்கு காரணம் எந்த வகையான பொறுப்புகளும் இல்லாமல்..சோம்பியிருத்தல் வேலைவெட்டி எதுவுமில்லாமல் சதா மனம் எதையாவது சிந்தித்துகொண்டேயிருத்தல்…

சிறுவயதில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள்… விரும்பியது எதையும் அடையாத ஏக்கம்.. சுற்றங்களாலும் உறவுகளாலும் உதாசீனபடுத்தபட்டிருத்தலுமாகும்….

இது குணபடுத்தகூடிய ஒன்றுதான்… பிரதி உபகாரமாக நேசித்தல்..அதிக அக்கரை எடுத்துகொள்ளல்…அறிவுறுத்தல்.. பிடித்த வேலையை செய்ய வைத்தல்… எப்பொழுதும் சும்மா சோம்பியிருக்காமல் எதையாவது பொழுதுபோக்குபோல் செய்யவைத்துகொண்டேயிருத்தல்..

நல்ல புத்தகங்கள் படிக்கசெய்தல்… வெளியிடங்களுக்கு அழைத்து சென்று நல்ல சொற்பொழிவுகள் கேட்கசெய்தல்.. மலை வாசஸ்தலங்களுக்கு அழைத்து சென்று அதிக முக்கியத்துவம் கொடுத்து மனம்விட்டு பேசுதல் ..பேச செய்தல் இனிய இசையை கேட்க செய்தல்… யோகா தியானம் மூலம் நன்மை உண்டாகலாம்…

அந்த அளவு செய்யுமளவிற்கு நெருங்கியவர் இல்லை எனில்.. சற்று டிஸ்டன்ஸ் கீப்அப் பன்னுவது நல்லது….