Header Banner Advertisement

வடகொரியா ஏவுகணை சோதனையை அடுத்து அபாய சங்கு ஒலித்த அமெரிக்கா !


North Korea Risk Congregation America Risk charm

print
அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘கவாசாங்-15’ ஏவுகணையை வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.
 
ஹவாய் தீவில், மாதம் தோறும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டு வருவது ம் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க ராணுவ தலைமையகம் அங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.