வறட்சியால் வாடும் பயிர்களுக்கு நுண்ணுயிர் திரவம் தெளிக்க வேளாண் துறை பரிந்துரை


001

print

வறட்சியால் வாடும் பயிர்களுக்கு நுண்ணுயிர் திரவம் தெளிக்க வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், பயிறு வகைப் பயிர்களில் பூ மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரத்தை தண்ணீரில் கலந்து தெளிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. 100 மில்லி முதல் 200 மில்லி அளவிலான மெத்தைலோ பாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் நீரில் கலந்து இலையில் நன்கு நனையும்படி காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

இது வறண்ட காலத்தில் பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். மேலும் 10 சதவிகிதம் மகசூல் அதிகரிப்பதுடன் வறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது. இது குறித்து தகவல் வேண்டுவோர் சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயனை அணுகலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.