Header Banner Advertisement

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் போர்க்கொடி


Prime Minister Narendra Modi presidential election

print
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தற்போது அங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதாஅமோக வெற்றி  பெற்றுள்ளமைக்கு மின்னணு வாக்கு இந்திரம்தான் காரணம் என்று அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூறிவரும் நிலையில் வருங்காலத்தில் அனைத்து தேர்தல்களையும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டின் முறைப்படிதான் நடத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்தியாவில் சட்டமன்ற .,பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும் கடந்த பலவருடங்களாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் அதை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாலும், மறுஎண்ணிக்கை என்றால் அது மிகக்கடினம் என்பதாலும், காலங்கள் மாறமாற அதற்கேற்றபடி மாற வேண்டிய சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது