விதி வலியது !


002

print

காட்டில் ஒருவன் தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தான்.அவர்கள் மிகவும் ஏழைகள்.

அவர்களுக்கு உடைமைகள் எதுவுமில்லை.அவர்கள் பகலில் நிர்வாணமாக இருந்து வந்தார்கள்.
எனவே, பூமியில் மூன்று குழிகள் வெட்டி அதில் கழுத்தளவு நிற்பார்கள். பகல் மறைந்த பிறகு இரவு நேரத்தில் குழிகளிலிருந்து வெளியே வந்து ஏதாவது உணவைத் தேடிக் கொள்வார்கள்.

ஒருநாள், இவர்களின் நிலையைப் பார்த்து வருந்திய ஒரு மகான் இறைவனிடம், “இந்த அனாதைகளுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

அதற்கு இறைவன், “அவர்கள் விதியில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்” என்றார்.

ஆனால் அந்த மகான் பிடிவாதம் செய்யவே இறைவனும் அந்த மூன்று பேருக்கும்,
மூன்று வரங்கள் அளிப்பதாகத் தெரிவித்தார்.இறைவனின் நற்செய்தியை அந்த மூன்று பேரிடமும் சொல்லி, “நல்ல வாழ்க்கை வாழுங்கள்” என்று அருளிச் சென்றார்.

அவன் மாலையில் குளிக்கச் சென்றான். குளித்து முடித்த பிறகு இறைவனிடம் நிறைய செல்வம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

இதற்குள் அவன் மனைவி இறைவனிடம், “நான் அழகியாக வேண்டும்” என்று கேட்டாள்.
உடனே அவள் தேவதை போன்ற பெண்ணாக மாறினாள்.அப்போது அங்கு இளவரசன் ஒருவன் அங்கு வந்தான். அவன் அவளது அழகில் மயங்கி அவளைத் தன் குதிரையில் ஏற்றிச் சென்றான்.அவள் நிர்வாணமாக இருந்ததால், இளவரசன் அவனது உடையால் அவளது உடலை மூடினான்.இதைக் கண்ட அவளது கணவன், “என் மனைவிக்குப் பன்றியின் முகம் வர வேண்டும்” என்று இறைவனிடம் ஒரு வரம் கேட்டான்.

அவள் முகம் பன்றியாக மாறியது. இதைக் கண்டு பயந்து போன இளவரசன், அவளைக் குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்றான்.அவர்களது மகன் நடந்ததை அறிந்து,
தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் தாய்க்குப் பழைய சுய உருவம் வர வேண்டும் என்று இறைவனிடம் வரம் கேட்டான்.

அவனது தாயும் சுயஉருவம் அடைந்தாள்.இப்படி அவர்கள் மூவருக்கும் அளிக்கப்பட்ட வரங்கள் மூன்றும் வீணாகப் போயின.

மீண்டும் அவர்கள் குழிகளுக்குச் சென்று பழைய வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
இதைக் கண்ட மகான், “விதியை மாற்றமுடியாது. அனைத்தும் இறைவன் செயல்படியே நடக்கும்” என்ற உண்மையை உணர்ந்தார்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.