Header Banner Advertisement

பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்து


field accident Accident Maharashtra

print

மராட்டிய மாநிலத்தின் துலே மாவட்டத்தில்செயல்பட்டுவரும் பாம்பே ப்ளையிங் கிளப் என்ற விமான பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய விமானத்தில் இரு பைலட்டுகள் நேற்று இரவு சக்ரி என்ற பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை மிகவும் அவசர அவசரமாக அந்த கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் தரையிறக்கினார். இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த விமான பயிற்சி நிறுவனத்தினர் அங்கு விரைந்து வந்து காயமடைந்த விமானிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்