Header Banner Advertisement

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது


arrested

print

நேபாள நாட்டில் வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

நேபாளத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்

தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அந்த கும்பலில் இரு்த அசாமை சேர்ந்த ராஜு மிஸ்ரா (வயது 23), மேற்கு வங்காளத்தின் சிலிகுரியை சேர்ந்த மொகமது பர்மான் (வயது 31) ஆகியோர் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் மற்றும் 1.13 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர் மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்