Header Banner Advertisement

வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை


www-villangaseithi-com

print

வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விபரங்களை மத்திய அரசு சேகரிக்க திட்ட மிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இந்திய மாணவர்களின் முழு விபரங்கள் அரசின் வசம் இல்லாததால், ஆபத்து நேரங்களில் அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க முடியாத நிலையில் இந்தியத் தூதரகம் உள்ளது. அதன் காரணமாக வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் விபரங்களைச் சேகரிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது

வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் இந்திய மாணவர்கள், madad.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் தங்களது சுயவிபரங்களை பதிவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் நெருக்கடியான சூழல்களில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மாணவர்களை எளிதில் அணுகி, பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று அவ ரது பதிவில் தெரிவித்துள்ளார்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.