வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என கணிப்பு


002

print

 
பட்டப்படிப்புகளுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்கலையில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரை மையமாக வைத்து செயல்படும் கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது :-

இந்தியர்களின் சராசரி வருமானம் அதிகரித்து வருவதால் அதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்க வாய்பு அதிகம் உள்ளது .

சீன பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அந்நாட்டு மாணவர்கள் அதிகளவில் அமெரிக்க பல்கலையில் படித்தனர். இதேபோன்ற சூழ்நிலை இந்திய மாணவர்கள் மத்தியிலும் காணலாம்

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உயர் பதவிகளை பிடிக்கவும், சாதனை ஆர்வம் காரணமாகவும் சர்வதேச அளவிலான படிப்பில் இந்திய மாணவர்கள் கவனம் செலுத்த துவங்குவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.