Header Banner Advertisement

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலிலேயே நடிகர் கமல்ஹாசன் போட்டியிட முடிவு ?


ACTOR Kamal Haasan R.K Nagar By election Contest

print

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அவரது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது .

அதிமுக பொதுச் செயலாளரும் .,தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியான ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பையடுத்து தினகரன், மதுசூதனன்.,தீபா உள்ளிட்ட 62 பேர் வேட்பளராக தேர்தல் களத்தில் இருந்தனர் . இந்த சுழலில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் காலியாகவுள்ள ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் கமல்ஹாசன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை  விமர்சித்து வருகிறார்.

இதன் காரணமாக அதிமுகவை சேர்ந்த அமைச்சரகள் அவர் அரசியலுக்கு முதலில் வந்து விட்டு அரசியல் பேசட்டும் என  அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்  .இந்த சுழலில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியலில் இறங்க போவதாகவும்த கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார் .மேலும் அவர்  தனிக்கட்சி துவங்கவும் திட்டமிட்டு அவரது ரசிகர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . இந்த சுழலில் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வரும் அதிமுகவை சேர்ந்த அமைச்சரகளுக்கு மூக்குடைப்பு அளிக்கும் வகையில் ஆர்கே நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அவரது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது .