அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை


Amazon stern warning Federal Minister Sushma Swaraj

print

பிரபல ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் இந்திய தேசிய கொடி போன்று கால் மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளமைக்கு அமேசான் நிறுவனத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தேசிய கொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து அமேசான் நிறுவனம் தனது இணையதளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது.

f

இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது:

அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் தயாரித்துள்ள அனைத்து பொருட்களையும் திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
உடனடி மன்னிப்பு கேட்காவிட்டால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்களும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் நிறுவனம் பெண்கள் அணியும் லெக்கின்ஸ் ஆடைகளில் இந்து கடவுளின் படம் பொறித்து விற்பனைக்கு வெளியிட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.