Header Banner Advertisement

அனிதா குடும்பத்தினருக்கு ரூ.15லட்சம் நிதியுதவி வழங்கிய டிடிவி தினகரன்!


Anita Dinakaran

print

மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென நீண்ட கால கனவு கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு ‘நீட்’ தேர்வு எமனாக மாறியதால், விரக்தியில் கடந்த சில வாரங்களுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் .,அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும்போராட்டம் வெடித்தது

இந்த நிலையில் தினகரன் தனது ஆதரவு நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருடன் இன்று மாணவி அனிதா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.

அதற்கு முன்னதாக தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம். நாங்கள் தேர்தல் ஆணையத்தோடு வெற்றி பெற்றாலும் அவர்கள் நீதிமன்றத்துக்கு முறையீட்டிற்கு போவார்கள். ஆகையால் இது முடிகிற கதை அல்ல. ஆனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம் என்று தினகரன் கூறினார்