Header Banner Advertisement

அனிதா தற்கொலை விவகாரத்தில் அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் தூண்டிவிட்டுள்ளதாக செல்லூர் ராஜு தகவல்


Anita struggle opposition parties SeLUR Raju

print
அனிதா தற்கொலை விவகாரத்தில் அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் தூண்டிவிட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் .
 
மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென நீண்ட கால கனவு கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு ‘நீட்’ தேர்வு எமனாக மாறியதால், விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
 
அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது.
 
மருத்துவர் ஆகும் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் உள்ள திடலில் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் , அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்
இந்த நிலையில் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
நீட் தேர்வு விலக்குகாக தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்தது எனவும் ஆனால் உச்சநீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது .அனிதா தற்கொலை விவகாரத்தில் அரசுகளுக்கு எதிராக
தற்போது தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் எதிர்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவை என செல்லூர் ராஜு கூறினார்