Header Banner Advertisement

பாஜக மோடி அரசின் மீது பொதுமக்கள் காட்டும் வெறுப்பை குறைக்க 27 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்க முடிவு


modi gst Leech

print

பாஜக மோடி அரசின் மீது பொதுமக்கள் காட்டும் வெறுப்பை குறைக்க முடிவெடுத்து 27 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் விதமாக கடந்த ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட ஜி.எஸ்.டி., தொழில் உற்பத்தி துறையில் பாதிப்பை உண்டாக்கியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி மோடி அரசு மீது கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்

இந்த நிலையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டம் நேற்று நடைபெற்ற போது பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்கும் முடிவுகளும், தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டது

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆற்றிய உரையின் போது கூறியதாவது :-

ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ. 1 கோடிக்கு கீழ் வணிகம் புரிபவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். மாதாமாதம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. தங்க நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

ஏ.சி ரெஸ்டாரண்ட்களுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து, 12%-ஆக குறைப்புக்கப்பட்டுள்ளது. எரிவாயு அடுப்புகளுக்கான ஜிஎஸ்டி 28% லிருந்து குறைக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச ஜிஎஸ்டி வரி 28 சதவீத பட்டியலிலிருந்த பல பொருட்கள் குறைவான வரி சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆயுர்வேத மருத்துவ பொருட்கள், கையால் செய்யப்படும் நூல்கண்டு உள்ளிட்ட 27 பொருட்களுக்கு வரிகள் குறைய உள்ளன.

இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகருக்கான உச்ச வரம்பு ரூ. 75 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வணிகம் புரிவோர் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யலாம். ஏற்றுமதியாளர்கள் முன்கூட்டியே செலுத்திய வரி அக்.10-ம் தேதியிலிருந்து திரும்ப வழங்கப்படும். 2018 ஏப். 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு ஈ-வாலட் சேவை வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்

அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் வருகிற நவம்பர் .9 மற்றும் 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.