Header Banner Advertisement

திருமாவளவன் நாயை செருப்பால் அடியுங்கள் எனக் கூறிய பாஜக பிரமுகர் !


Thirumavalvan bjp

print

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் நாயை செருப்பால் அடியுங்கள் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் செந்தில் தேவர் என்பவர் தனது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது .

இந்த சுழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி துவங்கும். ஜூன் 28 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 1. போட்டி இருக்கும்பட்சத்தில் ஜூலை 17 ம் தேதி தேர்தல் நடக்கும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 20ம் தேதி எண்ணப்படும் என்று நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் செந்தில் தேவர் என்பவர் தனது முகனூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள்ள ஒரு பதிவில் கூறியுள்ளதாவது :-

#செருப்பால் #அடியுங்கள் இந்த #திருமாவளவன் #நாயை…!

சென்ற முறை குடியரசு தலைவர் தேர்தலில்… பழங்குடி இனத்தை சேர்ந்த பி.ஏ சங்மாவை ஆதரிக்காமல்…

பிராமிண வகுப்பை சேர்ந்த…

பிரணாப் முகர்ஜியை ஆதரித்த திருமாவளவன், தற்பொழுது ஒரு தலித் தான் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என சொல்வது…

பைத்தியகாரத்தனமானது… என்று முகனூல் பதிவில் செந்தில் தேவர் கூறியுள்ளார்.