Header Banner Advertisement

ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்பதிவு புதிய ஆப் அறிமுகம்


booking-train-tickets-on-line-new-app-launched-2

print

கைபேசி வாயிலாக இணையதளம் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முன்பதிவு செய்ய புதிய ஆப் பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார் . இந்த ஆப் பயன்படுத்தி தட்கல் பயணச் சீட்டு, பெண்கள் கோட்டா, பிரீமியம் தட்கல் கோட்டா மற்றும் சாதாரண பயணச் சீட்டு முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மூலம் ஆன்-லைன் முன்பதிவு நடைபெறுகிறது.

கைபேசி வாயிலாக ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் டவுன்லோட் செய்து பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும். ரயில்வே இணையதளத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ‛ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்3 என்ற பெயரில் புதிய ஆப் வடிவமைக்கப்பட்டது. இதில், பழைய ஆப்பை காட்டிலும் வேகமாகவும் எளிமையாகவும் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஆப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்