Header Banner Advertisement

ஜியோ., ஏர்டெல்., நிறுவனங்களுக்கு போட்டியாக களம் குதிக்கும் பிஎஸ்என்எல் !


BSNL AIRTEL JIO

print

ஜியோ., ஏர்டெல்., நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.339 கட்டணத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளை அளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டப் படி ரூ.99 செலுத்தும் போது அளவற்ற ஆன்-நெட் அழைப்பு (ஒரே நெட்வொர்க்களுடன் அழைப்பது) மற்றும் 500 எம்பி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே திட்டத்தில் அளவற்ற ஆன்-நெட் அழைப்பு மற்றும் 300 எம்பி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.

இதே போல் ரூ.339 திட்டமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த திட்டத்தில் அளவற்ற இலவச அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது. தற்சமயம் அளவற்ற இலவச அழைப்பு மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பயன்பாடு 28 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிஎஸ்என்எல் எண்களுக்கு மட்டும் அளவற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது, ஆஃப்-நெட் அழைப்புகள் (அனைத்து நெட்வொர்க்களுடன் அழைப்பது ) நாள் ஒன்றிற்கு 25 நிமிடங்கள் வரை மேற்கொள்ள முடியும், இதன் பின் நிமிடத்திற்கு 25 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்குள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜியோ பிரைம் திட்டத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் திட்டத்தை எதிர்கொள்ள பாரதி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .