Header Banner Advertisement

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு


Election Commission

print

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே செய்து விட்டால் தேர்தல் செலவு கணக்கு தொடர்பான பிரச்னை எழாது. இதன் மூலம் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும். இதனால் ஊழல் இன்றி தேர்தலை நடத்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இது தொடர்பாக சட்டம் மற்றும் பணியாளர்கள் மீதான பாராளுமன்ற ., நிலைக்குழு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

அரசின் இந்த திட்டத்திற்கு தேர்தல் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து
அனுப்பியுள்ள கடி த்தில் தெரிவித்துள்ளதாவது :-
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஆதரிக்காது. ஏனென்றால், தேர்தல் செலவுக்கு பணத்தை அரசே ஒதுக்கீடு செய்துவிட்டால் வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவுகளையும், அவர்களுக்காக மற்றவர்கள் செலவு செய்வதையும் தேர்தல் ஆணையத்தால் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும்.

அதே நேரம், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நிதி, அவர்கள் அதை செலவு செய்யும் விதம் ஆகியவற்றில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடைமுறையில் கடுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதையே தேர்தல் ஆணையம் விரும்புகிறது. ஏனெனில் இந்த இரண்டும்தான் தேர்தலின்போது தீர்வு காணப்படவேண்டிய முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இணையம் மூலம் ஓட்டளிக்க முறை கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது