Header Banner Advertisement

தமிழகத்தில் முதன் முதலாக பெண் ஆணவக்கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த இருவருக்கு தூக்கு தண்டனை விதிப்பு


case-female-anavakkolai-kill-two-sentenced-death-state-assessment

print

தமிழகத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை வெட்டிக்கொலை செய்த இருவருக்கு சமீபத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முதன் முதலாக தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் 27. ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். 2016 மே மாதம் 3ம் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் மகளை தேடிய சங்கரநாராயணன் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டில் விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை என்றார். ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணியாவார். கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த ஆணவக்கொலையாகும்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், மனைவி செல்லம்மாள் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கடந்த மே மாதத்தில் நடந்த ஆணவக்கொலைக்கு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.