Header Banner Advertisement

ரொக்கமில்லா பண பரிவர்த்தனையில் திபெத் சாதனை படைத்துள்ளதாக தகவல் !


%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d

print

ரொக்கமில்லா பண  பரிவர்த்தனையில் திபெத் சாதனை படைத்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீன அரசின் ஆதிக்கத்தில் உள்ள, திபெத்தில், வசிக்கும்17 லட்சம் மக்களிடம் கைபேசி வைத்துள்ளனர்.மேலும் அங்குள்ள உணவகங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள், திரையரங்குகள் , என அனைத்திலும், இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.

சிறிய நகைக் கடைகளிலும் இணையதள பண பரிவர்த்தனை ஏற்கப்படுகிறது.கடந்த 2015ல் திபெத்தில், 83.3 சதவீத பண பரிவர்த்தனை ஆன்லைனில் செய்யப்பட்டதாக ‘சீன ஆன்லைன் பேமென்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில், ரொக்கமில்லா பண  பரிவர்த்தனைக்கு பொது மக்களின் ஆதரவு மேலும் பெருகியுள்ளதால், ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. விரைவில் ரொக்கமில்லா பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டும்’ என்று திபெத் தலைநகர் லாசாவில் உள்ள ‘பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சைனா’ கிளை அதிகாரி நோர்பு தெரிவித்துள்ளார் .