இந்தியா., வியட்நாம் நாடுகளின் செயல்பாடுகளை கண்டு கொந்தளிக்கும் சீனா


china, India, Vietnam, the countries of the actions by the sleight

print

வியட்நாம் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ள செயல்பாடுகளை கண்டு சீனா பெரும் கொந்தளிப்பில் உள்ளது

.வியட்நாமின் ஹனோய் நகருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சென்ற போது வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தவிர வியட்நாம் கப்பல் படைகளுக்கு இந்தியா நீர் மூழ்கி கப்பல் பயிற்சியும் அளித்து வருகிறது. இந்நிலையில் வியட்நாம் இந்தியாவிலிருந்து ஏவுகணைகள் வாங்கும் திட்டத்திலும் உள்ளது. இதனால் சீனா கலக்கம் அடைந்து கொந்தளிப்பில் உள்ளது

இந்தியா வியட்நாம் இடையேயான நட்புறவில் சீனா தலையிட விரும்பவில்லை என்றும் அதே நேரம் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இரு நாடுகளுக்கு இடையோன ஏவுகணை ஒப்பந்தம் இருக்கும் என சீனா கருதுகிறது. இந்நிலையில் வியட்நாம் அதிபர் குயேன் பு டிரோங் ஜனவரி 12ல் அரசு முறைப்பயணமாக சீன தலைநகர் பெய்ஜிங் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் வருகையின் போது இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டி சீனா வியட்நாமிடம் வலியுறுத்த முயற்சிப்பதாக ஊடகங்க ளில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.