Header Banner Advertisement

”தென்னை நகரம்” எனும் பட்டத்தை பொள்ளாச்சியும் ”நெற்களஞ்சியம்” எனும் பட்டத்தை ஆனைமலையும் இழக்கும் அபாயம்


Coconut City Pollachi Risk Drought

print

பொள்ளாச்சி ,மற்றும் ஆனைமலை வட்டாரத்தில் இந்த வருடமாவது தென்மேற்கு பருவமழையும் , வடகிழக்கு பருவமழையும் ..நன்றாக பெய்யாவிட்டால் கடும் வறட்சி ஏற்படுவதன் மூலம் பொள்ளாச்சி ”தென்னை நகரம் பட்டத்தையும்,,ஆனைமலை பகுதி ‘கோவையின் நெற்களஞ்சியம்’ பட்டத்தையும், இழந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி .பகுதியில் வருடத்திற்கு சராசரி மழை அளவு 700.மி.மீ அதாவது பொள்ளாச்சியில் தென்மேற்கு பருவமழை 3௦௦முதல் 350.மி.மீ. வரையிலும் ,வடகிழக்கு பருவமழை .3௦௦முதல் 350.மி.மீ. வரையிலும்., கிணத்துக்கடவு பகுதியில் 330 முதல் 350 .மி.மீ வரையிலும் .. ,வடகிழக்கு பருவமழை 230 முதல் 250 .மி.மீ. வரையிலும் …..ஆனைமலை பகுதியில் ……வருடத்திற்கு சராசரி 700 .மி.மீ. வரையிலும் அதாவது தென்மேற்கு பருவமழை 460 .மி.மீ ,, . வரையிலும் ,வடகிழக்கு பருவமழை .240 .மி.மீ வரையிலும் பெய்யும். . ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துப்போய் பாதியளவு கூட பெய்யவில்லை .இதனால் நிலத்தடி நீரும் குறைந்து போய்,குளம் குட்டை கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால்,இவ்வட்டார விவசாயிகள் வருடாவருடம் பெய்யும் மழை அளவிற்கு தகுந்தபடி விவசாயம் செய்ய தொடங்கினார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் மழை குறைந்து கொண்டே போனதால் தென்னை விவசாயம் பாதிப்பு அடைந்து கொண்டே வந்ததது .

இதனால் தென்னை சார்ந்த தொழில்களும் பாதிப்படைந்தது..இதில் ஈடுபட்டுவந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பும் ஏற்பட்டு வந்தது .ஆனைமலை பகுதியில் நெல் விவசாயம் குறைந்து கொண்டே வந்ததால்,கால்நடைகளுக்கு தீவன பிரச்னை ஏற்பட்டு அதனால் பால்வளமும் குறைந்து கொண்டே வந்தது ..விவசாயிகள் உழவு தொழிலுக்காக பயன்படுத்திய உழவு மாடுகளை பொள்ளாச்சி ”மாட்டு சந்தையில் .அடி மாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் .

பொள்ளாச்சி வடக்கில் 16559, ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை மரங்களும், .சோளம் போன்ற பயிர்கள் 2 ஆயிரம்ஹெக்டேர் .பயறு வகைகள் 900 ஹெக்டேர், ,எண்ணெய் வித்துகள் 600 ஹெக்டேர் பரப்பிலும் பொள்ளாச்சி தெற்கில் 10500 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை மரங்களும் ,சோளம் 1400ஹெக்டேர் பரப்பிலும் பயறுவகைகள் 750 ஹெக்டேர், பரப்பிலும், ,எண்ணெய் வித்துகள் 130 ஹெக்டேர் பரப்பிலும் ,கிணத்துக்கடவு வட்டாரத்தில் 11 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை மரங்களும் ,பயறு வகைகள் 2011 ஆயிரம் ஹெக்டேர், பரப்பிலும், , காய்கறிகள் ஒரு ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 52 ஹெக்டேர், பரப்பிலும், ,,ஆனைமலை வட்டாரத்தில் நெல் சாகுபடி முதல் போகம்1100 ஹெக்டேர், பரப்பிலும் இரண்டாம் போகம் 800 ஹெக்டேர், பரப்பிலும் தென்னை மரங்கள் 21 ஆயிரம் ஹெக்டேர், பரப்பிலும் ,எண்ணெய் வித்துகள், 1600 ஆயிரம் ஹெக்டேர், பரப்பிலும்,, பயறு வகைகள் 400 ஹெக்டேர், பரப்பிலும்,சோளம் 800 ஹெக்டேர், பரப்பிலும் பயிரிடப்பட்டு வந்ததது இதில் பருவ மழைகள் பொய்த்ததால் சாகுபடி நிலங்கள் வறட்சியால் பாதியாக சுருங்கியது..

நன்கு வளர்ந்த ஒரு தென்னைமரம் 40 நாளைக்கு ஒரு முறை ஒரு மரத்தில் இருந்து சுமார் நூறு முதல் நூற்று அய்ம்பது காய்கள் வரை பலன் கொடுக்கும் திறன் உடையது .இப்படி ருந்த தென்னை மரத்தை ஒரு மரம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை விலை பேசி வெட்டி வீழ்த்தி விறகாக அனுப்பினால் எந்த விவசாயிக்கும் நெஞ்சு பொறுக்குமா .தென்னையின் நிலைமை இப்படி இருக்க நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலைமை இதனை விட படு மோசம் . அணைகளில் தண்ணீர் உள்ள நிலைமையை பொறுத்து வருடம் மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது இவ்வட்டாரத்தின் வழக்கமான விவசாய பணியாகும். ஆனால் முதலுக்கே மோசம் வந்த கதையாக தனது வீட்டு சாப்பாட்டு தேவைக்கும் . அடுத்த போகத்திற்கு தேவையான ‘விதை நெல்லுக்கு விவசாயம் செய்யவே போதும் பொதும் என்று ஆகி விடுகிறது .

நெல் சாகுபடியில் விவசாயிகள் படும் துன்பம் சொல்லி மாளாது . பருவமழை பெய்தவுடன் நிலத்தை பண்படுத்த மற்றும் உழவு செய்ய அலைந்து திரிந்து ஆள் பிடித்து ,மராமரத்து பணிகள் செய்து ;”நாற்றங்கால்’ விட்டு அதற்க்கு மருந்து அடித்து 30 ம் நாள் அதனை வயல்களில் ட்டு வசித்து வைத்து ,தண்ணீர் (இருந்தால்). பாய்ச்சி 105 ம் நாள் வரை மருந்துகள் அடித்து பாத்து காத்து அறுவடை சமயத்தில் வயல் அறுவடை செய்ய ஆள் கிடைக்காமல் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்வார்கள் .இந்த வகை அறுவடையில் நெல் கிடைக்கும் .ஆனால் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் தீவனமாக பயன்படும் ‘ வைக்கோல் ‘ கிடைக்காது. எப்படியெனில் இந்த வகை அறுவடை மூலம் கிடைக்கும் வைக்கோலை எந்த ஒரு கால் நடையும் மருந்துக்கு கூட முகர்ந்து பார்க்காது .

இதனால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமலும் ,,அதனால் கிடைக்கும் பால்வளமும் இல்லாமல் திண்டாடுவது இவ்வட்டார விவசாயிகளின் வருடாந்திர வாடிக்கை . பருவ மழை சமயத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமானது .எப்படியெனில் ௧௦௫ நாள் விவசாயம் செய்து அறுவடை சமயத்தில் சுமார் ஒரு வாரம் இப்பகுதியில் ”அடைமழை ” பிடித்து கொள்ளும்.அப்புறம் என்ன நன்கு விளைந்த நெற்பயிர்கள் அடைமழையில் வயலிலே அழுக தொடங்கிவிடும் அல்லது முளைக்க தொடங்கி விடும் .இந்த வகை விவசாயத்தில் விவசாயிகளுக்கு பலவகையில் வேலை மிச்சம் . எப்படி என்று கேட்க்கிறீர்களா .நெல்முளைத்து போவதால் அறுவடைசெய்ய ஆள் பிடிக்க வேண்டியது இல்லை, வயல் வெளிகளில் உள்ள வைக்கோல்களை அகற்ற வேண்டியதில்லை. ஆனால் இதெல்லாம் கடந்த 4 ஆண்டோட சரி ..அதன் பின்னர்தான் பருவமழைகள் பொய்த்ததால் இப்பகுதி விவசாயிகள் ”மாற்று விவசாயம் ‘ செய்ய நினைத்து சிலர் வயல் வெளிகளில் ‘தென்னம்பிள்ளை ‘வைத்தனர் .சிலர் வாழை மரம் சிலர் கரும்பு பயிர் நட்டனர் .

இப்பகுதியில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக மேற்படியான தண்ணீர் அதிகம் செலவாகக் கூடிய பயிர்களை விவசாயிகள் பயிரட முடியாமலும் இதற்கு மாற்றாக தற்போது என்ன விவசாயம் செய்யலாம் என யோசித்து செய்வதறியாமல் விழிபிதுங்கி உள்ளனர்

இது போன்ற பிரச்சனைகளால் பொள்ளாச்சி ” தென்னை நகரம் ” என்ற பெயரையும் ,ஆனைமலை ”கோவையின் நெற்களஞ்சியம்’ என்ற பெயரையும் வெகு விரைவில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சுழலில் மேற்படியான பிரச்சனைகள் குறித்து அப்பகுதியை விவசாயிகள் தமிழக அரசின் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை போக்கி அவர்களுக்கு உதவிடும் வகையில் எவ்விதமான ஆலோசனைகளும் வழங்கமால் இருந்தது வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.