சிட்டையை போட்டு கல்லா கட்டும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள்?


construction e Indian Border Security Force officers Kalla Commission

print

இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் காணொளி வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்து பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் எல்லைப் பாதுகாப்பு படை ஜவான்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் பாதி விலைக்கு விற்கப்படுவதாக, பொது மக்களும், ஜவான்களும் குற்றம் சாட்டுகின்றனர் .

அதேபோல் அலுவலகத்திற்கு பொருட்கள் கமிஷன் அடிப்படையில் வாங்கப்படுவதாக பர்னிச்சர் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் எனும் வீரர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் காணொளி வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்து பெரும் சர்சையை கிளப்பியுள்ளது

அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், காய்கறிகளோ, தொட்டுக்கொள்ள ஊறுகாயோ வழங்கப்படுவதில்லை; வேக வைத்த பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்தார். மேலும் எல்லையில் 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே, மோசமான தட்பவெப்ப நிலையில் பணி புரியும் நாங்கள், பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்வதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தார்

எல்லையை காக்கும் சிப்பாய்களான எங்களுக்கு வழங்கப்படும் அநீதி இது எனத் தெரிவித்த அவர், இந்த வீடியோ வெளியாகும்போது தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார். முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் ரொட்டி, டீயை காணொளியில் பதிவு செய்த யாதவ், இக்குறைகளை போக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்

இதுகுறித்து டுவிட்டரில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்

இந்த நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பி.எஸ்.எப்., உயரதிகாரிகள் விற்பனை செய்வதாக பொது மக்களும், ஜவான்களும் குற்றம் சாட்டுகின்றனர்

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஜவான் ஒருவர் கூறியதாவது :-

எங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, காய்கறி ஆகியவற்றை, முகாமுக்கு வெளியே பொது மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, எங்களுக்கு எந்த வசதியும் கிடைக்காமல் செய்து விடுகின்றனர். தினசரி எங்களுக்கு தேவையான பொருட்களையும் கிடைக்காமல் செய்து விடுகின்றனர். அவற்றை தங்களது ஏஜென்ட்களுக்கு விற்கின்றனர் எனக்கூறினார்.
ஒப்பந்தக்காரர் ஒருவர் கூறியதாவது:

பி.எஸ்.எப்., முகாம் வெளியே, சந்தையில் விற்கப்படும் விலையை விட பெட்ரோல் விலை பாதிவிலையில் எங்களுக்கு கிடைக்கும். அரிசி மற்றும் பல பொருட்கள் குறைந்த விலையில் எங்களுக்கு கிடைக்கும் என்றார்.

பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், அலுவலக உபயோகத்திற்காக எங்களிடம் பொருட்கள் வாங்கும் உயரதிகாரிகள், அதற்கு கமிஷன் பெற்று விடுவர். இதற்காக அவர்கள்தரம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். பி.எஸ்.எப்., ஏலத்தில் மின்னணு முறையிலான டெண்டர் கிடையாது எனக்கூறினார்

இந்த குற்றச்சாட்டுகளை பி.எஸ்.எப்., உயரதிகாரிகள் மறுத்துள்ளனர் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.