Header Banner Advertisement

சதிகார கும்பலுக்கு தீபா கடும் எச்சரிக்கை !


jayalalithaas-niece-deepa-action-notice

print

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையான அதிமுகவின் தீவிர தொண்டர்கள் பெரும்பாலோன ஆதரவாகவும் சசிகலாவிற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதால் சசிகலாவின் ஆதரவாளர்கள் மிரண்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது .

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5- மறைவானதை அடுத்து அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுக வை சேர்ந்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அவரை அந்த பதவியில் கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி அமரவைத்து உள்ளனர்

இதையடுத்து கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டமைக்கு அக்கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதனை வெளிப்படுத்தும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக தமிழகத்தில் ஓட்டப்பட்ட போஸ்டரில் சாணி வீச்சு, கருப்பு மை வீச்சு நடத்தியும்,பிளக்ஸ் பேனரை கிழித்தும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

தமிழக முழுவதும் குக்கிராமங்கள் தோறும், அதிமுக.,தொண்டர்களிடம், தீபா, ஓசையில்லாமல் ஊடுருவியதால் தீபாவை வாழ்த்தியும் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்களை தன்னெழுச்சியாக அதிமுக வினரே வைத்துள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், தீபாவின் இல்லம் தேடி வருகின்றனர். அவர்கள், தங்கள் எண்ணங்களை நேரடியாகவே அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம், உங்கள் எண்ணங்களையெல்லாம் அறிந்து கொண்டேன்; என் எண்ணமும் அதுதான். விரைவில் அதற்கான ஏற்பாடுகளுடன், என் முடிவை அறிவிக்கிறேன் என்று சொல்லும் அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை தெரிய வேண்டும் என்றும் பக்குவமாகப் பேசி, தொண்டர்களை அனுப்பி வருகிறார்.

இப்படி குவியும் தொண்டர்கள் ஒரு புறம் இருக்க, சேலம், திருச்சி, கரூர், ஈரோடும் அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அ.தி.மு.க.,வினர் துவங்கி விட்டனர். சேலத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க., என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து, கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அம்மா தி.மு.க., என்ற பெயரிலும், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சி துவங்கப்பட்டுள்ளது.

இப்படி தன்னெழுச்சியாக, தீபாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவதை, அ.தி.மு.க., நிர்வாகிகளாலும்; சசிகலா ஆதரவாளர்களாலும் பொறுக்க முடியவில்லை. தீபா குறித்து பல்வேறு விதமான செய்திகளை, முடிந்த மட்டும் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பத் துவங்கி உள்ளனர். அப்படியொரு விஷயம்தான், தீபாவின் கணவர் பேட்ரிக். அவருக்காக தீபாவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார். அவர் தற்போது கிறிஸ்துவராகவே உள்ளார். அதனால்தான், அவர், நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. தீபாவை, இந்து இயக்கங்கள் தாங்கிப் பிடிக்க முயல்கின்றன. ஆனால், அவர் அதை விரும்பவில்லை. காரணம், அவர் கிறிஸ்தவர் என்பதுதான்.

அதுமட்டுமல்ல, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான், கட்சித் துவக்கும் பணியிலோ, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்கும் நிகழ்வையோ தள்ளிப் போட்டு வருகிறார் என்றெல்லாம் தகவல் பரப்புகின்றனர்.

இது தொடர்பாக, தீபா தெரிவித்துள்ளதாவது

நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன் கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்பத் துவங்கி விட்டார்கள். அதுவும், நான், கிறிஸ்மசுக்காக, டிவிட்டர் மூலம் வாழ்த்து செய்து பதிவிட்டதும், பார்த்தீர்களா… தீபா கிறிஸ்தவர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்றும் சொல்லத் துவங்கினார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா? அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதிலெல்லாம் கவனம் செலுத்தி, அவர்களோடு மல்லுக்கட்டி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.
என் கணவர் ஒரு கிறிஸ்தவர் என, இவர்களாக புதிய தகவல் சொல்கின்றனர். எதையோ ஒரு கதையை சொல்லிவிட்டு, அதற்கு, சப்போர்ட்டாக, சில விஷயங்களை பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.

நான் பொட்டு வைக்காதது, பெரிய குற்றமா என்ன? ஏற்கனவே, சிலர் என்னிடம் இது குறித்து சொன்னார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் நான், தீவிர கவனம் செலுத்துவதில்லை. பொட்டு வைத்தால், இந்து. இல்லாவிட்டால், கிறிஸ்தவரா? இப்படியெல்லாம் சொல்லி, ஒரு மதத்துக்குள் என்னை யாரும் அடக்க முடியாது. நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் நான் மதிக்கிறேன்; இதில், எங்கள் அத்தை மாதிரிதான் நானும்.

இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்ந்து சந்திக்கின்றனர். அவர்கள், நான், தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்படி நடந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறுகின்றனர். எது நல்லதோ, அதை கட்டாயம் செய்வேன் என்றுதான், அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன்.

மற்றபடி, இந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை தீவிரமாக ஆராய்ந்து; யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டெல்லாம் எதையும் செய்ய மாட்டேன். மற்றபடி, என் குடும்ப விஷயமெல்லாம், வெளியில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக அறிகிறேன். மிரட்டியெல்லாம் யாரும் யாரையும் பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும் என்று தீபா தெரிவித்துள்ளார்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.