Header Banner Advertisement

டெங்கு கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தம் அளிக்க லஞ்சம் வாங்க முயன்ற மாநகராட்சி ஆணையாளர் கைது


Dengue Bribery corporation commissioner arrested

print

டெங்கு கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தம் அளிக்க லஞ்சம் வாங்க முயன்ற வேலூர் மாநகராட்சி ஆணையாளர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்

வேலூர் மாவட்டம் வேலபாளையத்தைச் சேர்ந்த பாலாஜி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்தார். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பியுள்ளார். இதற்காக, பாலாஜிக்கு ரூ.10.23 லட்சம் வழங்க வேண்டும்.

பணியாளர்களின் ஊதியப் பணத்தை வழங்க 2 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ. 22 ஆயிரத்தை இன்று வழங்க வேண்டும் என்று குமார் கூறியுள்ளார். இது குறித்து பாலாஜி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் ராசாயன தடவைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது மாநகராட்சி ஆணையர் குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிப்பட்டார்.