பாஜகவின் மோடி அரசுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம்!


description-state-election-commission-asking-modi

print

மத்திய பட்ஜெட் தேதியை மாற்றுவது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

வருகிற ஜனவரி 31ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடக்கும் எனவும், பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது . இந்த நிலையில் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 ம் தேதி வரை உத்திர பிரதேசம் கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தேர்தலுக்கு முன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இது தொடர்பாக தேர்தல் ஆணையாள ரையும் சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.