Header Banner Advertisement

கரப்பான் பூச்சிக்காக அறுவை சிகிச்சையை நிறுத்திய மருத்துவர் !


the-doctor-stopped-the-operation-of-the-cockroach

print

45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மருத்துவமனையில் நடந்த கால் அறுவை சிகிச்சையின் போது, அங்கு கரப்பான் பூச்சி வந்ததால் சிகிச்சையை பாதியிலேயே மருத்துவர் நிறுத்திய சம்பவம் தானேவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

தானே மாநகராட்சி சார்பில் கடந்த 2013ல் துவங்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் எனும் மருத்துவமனை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டு 500 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் தற்போது ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில் பல இடங்களில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்து வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அறுவை சிகிச்சை வளாகத்தில் கரப்பான் பூச்சியை பார்த்த மருத்துவர் ஒருவர் புகார் அளிக்கும் முன்னர் அதனை கொன்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு கால் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. சுத்தமாக இருக்க வேண்டிய அந்த அறையில், கரப்பான்பூச்சி வந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர் அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு, ஆதாரத்துடன் நிரூ பிப்பதற்காக அதனை கைபேசியில் படம் எடுத்தார் அதன் பின்னர். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதன் பின்னர் அந்த அந்த காணொளியை மருத்துவமனை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் .

கரப்பான் பூச்சி வந்ததால் சிகிச்சையை பாதியிலேயே மருத்துவர் நிறுத்திய சம்பவம் தானேவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது