Header Banner Advertisement

ஆப்கானிஸ்தான் காபூலில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 38 பேர் பலி


double-bombing-kabul-kills-38-afghanistan

print

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாராளுமன்ற வளாகம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பாராளுமன்ற வளாகம் அருகே வெடிக்க செய்தான். தொடர்ந்து, எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது.

இந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண்கள் உட்பட 38 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளதுடன்   குண்டு வெடிப்பில் உயரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வரும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளார் .