Header Banner Advertisement

இந்தியாவில் 30 சதவீதம் டிரைவிங் லைசென்சுகளில் போலியானது என நிதின் கட்காரி பகீர் தகவல்


Driving license 30 India Nitin Gadkari Fake Information

print

இந்தியாவில் உள்ள ஓட்டுநர் உரிமங்கள் 30 சதவீதம் போலியானது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்

புது தில்லியில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்காரி பேசியதாவது:

இந்தியாவில் போக்குவரத்து அமைப்பை திறம்பட மேம்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். போக்குவரத்து விதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க வேண்டும். சாலை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். இது நமது கடமை.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிப்பதன் மூலம், நேர்மறையான பாதிப்பு ஏற்படும். மேலும், இதனால் மக்கள் சாலை விதிகளை கடுமையாக பின்பற்றுவார்கள். நமது சாலை அமைப்பை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நவீனப்படுத்துவதுடன், கணிணிமையமாக்க வேண்டும். அதிகாரிகள் தலையீடு இன்று அபராதம் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று நிதின் கட்காரி கூறினார்