Header Banner Advertisement

ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவு


GST

print

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு வகை செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி கடந்த சில மாதங்களுக்கு ஒப்புதல் வழங்கினார் , இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு வருகிற ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார் .

இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் சக்திகாந்த் தாஸ் கூறியதாவது:

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்படும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி.,மசோதா தொடர்பான ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரைவு மசோதாக்களை மார்ச் 9ம் தேதி துவங்கும் இரண்டாவது கட்ட பட்ஜெட் பாராளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இழப்பீடு வரைவு மசோதாவுக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 18 ம் தேதி நடந்த ஜிஎஸ்டி ஆலோசனை குழு கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது