Header Banner Advertisement

தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என குஜராத் முதலமைச்சர் சவுண்டு


Election Commission

print

தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறியுள்ளார்

குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் பாரதிய ஜனதா ,வின் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றனர். முன்னதாக காங்கிரஸ், கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் பாரதிய ஜனதா .,வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்கிரஸ் , தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து நீண்ட பரிசீலனைக்கு பின்னர் இரு ஓட்டுகளும் செல்லாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து நள்ளிரவுக்கு பின் ஓட்டு எண்ணும் நடைபெற்று பாரதிய ஜனதா.,வின் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி செய்தியார்களிடம் கூறியதாவது :-

தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சட்டப்படி போராடுவோம் என்று விஜய் ரூபானி கூறினார்