Header Banner Advertisement

தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரூடம்


Vijayakanth

print
தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் வரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை
ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை விஜயகாந்த் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு, வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது; ஏனெனில் தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் வரும் என்று விஜயகாந்த் கூறினார்.