விவசாயிகளுக்கு ஒருநாள் சம்பளத்தை தர அரசு ஊழியர்கள் முடிவு


Employees' Association decided give one day's salary farmers in drought

print

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை தமிழக அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது

இது குறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

காவிரி நதிநீர் இல்லாத நிலையில் பருவமழையும் பொய்த்து போனதால் தமிழக விவசாயிகள் துயரத்தில் வாடியுள்ளனர். பயிர்கள் கருகியதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வேதனையான நிலையை அறிந்து அவர்கள் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில் அரசு அலுவலக உதவியாளர்கள், ஊராட்சி, நகராட்சி, அனைத்து பல்கலை கழகங்கனின் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம்.

விவசாயிகள் நலன் காக்க ஒருநாள் ஊழியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். வணிக வரித்துறை அலுவலக உதவியாளர்கள் சங்கம், மாநகராட்சி, நகராட்சி அலுவலக உதவியாளர்கள் சங்கம், ஊராட்சி, குடிநீர் மேல் நிலையநீர் தேக்க தொட்டி, கை பம்பு மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கணேசன்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.