Header Banner Advertisement

குதிரை பேர இ.பி.எஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழக போலீஸ்


Tamilnadu Police

print

தமிழக காவலர்களின் கோரிக்கைகள் களையப்படாமல் தமிழக அரசு வஞ்சித்தால் விரைவில் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கபடும் என தமிழக காவல்துறையில் பணியாற்றும் எவரோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு தகவலை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார் .

இது குறித்து விரைவில் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கபடும் எனும் தலைப்பில் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-

தமிழக காவலர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதீகளை களைய கோரி பலமுறை சமூகவலைதளங்களில் குமுறி வந்தனா்.

ஏழாவது ஊதிய குழுவில் தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டி தலைமை செயலாளா், உள்துறை செயலாளா் மற்றும் காவல்துறை இயக்குநா் ஆகியோருக்கு மனு அனுப்பினா்.

2017 ஜீலை 6ம் தேதி காவல்துறை மானிய கோரிக்கையின் போது காவலர் குடும்பங்கள் தலைமைசெயலகம் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க போவதாக செய்திகள் வந்தது. முதல்வரை சந்திக்கவும் ஒரு கூட்டம் சென்றது ஆனால் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனா்.

அடுத்ததாக காவல்துறை இயக்குநா் காவலர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அறிமுகபடுத்தினாா் அதிலும் குறைகளை தெரிவித்தோம் ஆனால் கடைசி வரை ஏமாற்றமே பரிசாக அளிக்கப்பட்டது.

ஊடகங்களிலும், செய்திகளிலும் இந்தியாவிலேயே தமிழக காவலர்களுக்கு மட்டுமே குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது, அதிகமான பணிச்சுமை என செய்திகளும், கருத்துகணிப்புகளும் வெளியானது ஆனால் அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

2017 ஏப்ரல் மாதம் முதல் 2017 செப்டம்பா் மாதம் வரை 101 காவலர்களின் உயிர்கள் பலியானது ஆதாரத்துடன் நிருபித்தும் யார் செத்தால் நமக்கென்ன என்பது போல் மெத்தனமாக உள்ளது அரசும், அதிகாரிகளும்.

தற்போதைய சூழ்நிலையில் அவரவா் தங்களது பிரச்சனைகளை தீர்க்க போராட்டமாே ஆர்ப்பாட்டமாே செய்து தங்களது பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருகின்றனா். காவலர்களும் அப்படி செய்தால் தான் அரசு செவி சாய்க்குமா.?

தற்போது லஞ்சம் தலைவிரித்தாட முக்கிய காரணமே அரசும், அதிகாரிகளும் தான்.

காவலர்களுக்கும் குடும்பம் உள்ளது. எதிர்காலம் பற்றிய கவலையும் உள்ளது ஆனால் அதை அரசு கவனத்திற்கு எடுத்து கொள்ளாமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இப்படிபட்ட சூழ்நிலையில் நேர்மையாக பணி செய்யும் காவலரும் தடம் மாற அரசே வழி வகுக்கிறது.

மனக்குமுறலுடன் காவலர்கள் பணி செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அடக்கி வைக்கும் குமுறல்கள் வெளிபட்டால் என்ன நடக்குமென தெரியாது, விரைவில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காவலர்கள் எப்படி போராடி வென்றார்களாே அதை போல் தமிழகத்திலும் நடக்க உள்ளது.

தமிழக காவலர்களின் கோரிக்கைகள் களையப்படாமல் வஞ்சிக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்பட்டுள்ளது .