Header Banner Advertisement

பொய்.. பொய்.. ராஜமீனாட்சி கூறிய அனைத்து புகார்களும் பொய் என நீதி நேர்மை நியாயாத்தின் மறு உருவமாக செயல்படும் அமைச்சர் சரோஜா சவுண்டு


Minister Saroja Bribery threatened female official

print

குழந்தைகள் நல துறை அதிகாரி ராஜமீனாட்சி என் மீது கூறிய அனைத்து குற்றச் சாட்டுகளும் பொய்யானது என நீதி நேர்மை நியாத்தின் மறு உருவமாக செயல்படும் அமைச்சர் சரோஜா வெகு நாட்கள் கழித்து கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மிரட்டல் விடுத்தார் என ராஜமீனாட்சி கூறி இருக்கும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நீதி நேர்மை நீதி நேர்மை நியாயாத்தின் மறு உருவமாக செயல்படும்
அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகள் நல துறை அதிகாரி ராஜமீனாட்சி கூறிய அனைத்து புகார்களும் பொய்யானவை. உண்மைக்கு புறம்பானவை. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்று பொய் புகாரை கூறி வருகிறார்.

அவர் மீது நிதி கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. அதை அரசு விசாரிக்க இருந்தது. அந்த நேரத்தில், அவர் தப்பிப்பதற்காக என்மீது வீண் பழியை போட்டுவிட்டார். அரசின் விசாரணையை திசை திருப்புவதற்காகவே, என் மீது வீண் பழியை போட்டுள்ளார் குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்

குழந்தைகள் நலன் நிதியில், போலி ரசீதுகள் தயார் செய்து, மோசடியில் ஈடுபட்டார் அவரிடம் விசாரணை நடத்த இருந்த நேரத்தில் அவர், புதிய வதந்தியை பரப்புகிறார்

கடந்த 7ம் தேதி அவர் என்னை சந்தித்தார். அப்போது, தனக்கு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு அரசு விதிகளில் இடம் இல்லை என்பதால், அவரது கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன்.

பணியிட மாற்றம், நிரந்தரம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும். ஆனால், ராஜ மீனாட்சி, நேரடியாக என்னை சந்தித்தார்

நானே அவரை சந்திக்க அழைத்ததாக கூறினார். ஆனால், அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் அழைக்கவும் இல்லை. என்று நீதி நேர்மை நீதி நேர்மை நியாயாத்தின் மறு உருவமாக செயல்படும் அமைச்சர் சரோஜா வெகு நாட்கள் கழித்து கூறியுள்ளார்.

ராஜமீனாட்சி அமைச்சர் சரோஜா மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து வருகிற ஜூன் 8ம் தேதி, அவரிடம் விசாரணை நடத்த அரசு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது .