Header Banner Advertisement

159 மணி நேரம் கூடுதல் நேர பணி பார்த்த தொலைகாட்சி நிலைய பெண் ஊழியர் பலி


mysterious death

print

ஜப்பானில் அரசு தொலைகாட்சியில் 159 மணி நேரம் கூடுதல் நேர பணிபுரிந்ததால் பெண் திடீரென மரணம் அடைந்து விட்டதாக அந்த நாட்டு தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Japanese woman dies over time

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த பெண் மிவா சடோ (வயது 31) என்பவர் அரசு தொலைகாட்சியில் பணிபுரிந்து வந்தார். இவர் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்தார். 159 மணி நேரம் கூடுதல் நேர பணிபுரிந்தார்.

இவர் எற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிக நேரம் பணிபுரிந்ததால் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்து விட்டார் என தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 100 மணி நேரத்துக்கு மேல் கூடுதல் நேர பணி பார்த்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது