Header Banner Advertisement

நிலவேம்பு கசாயத்திற்கு எதிராக செய்திகளை பரப்பினால் வியாபாரம் பெருகும் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு


Jayalalithaa budget Finance Minister Jayakumar

print

நிலவேம்பு கசாயத்திற்கு எதிரான செய்திகளை பரப்பினால் வியாபாரம் பெருகும் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடித்து கூறியுள்ளார் .

இது குறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

நிலவேம்பு கசாயம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து விற்பனை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், சிலரை பிடித்து இது போன்ற செய்திகளை வெளியிட்டு வியாபாரத்தை பெருக்க முயற்சிக்கும் செயலுக்கு சிலர் அடிமையாகிவிட்டனர் என எண்ணுகிறேன்

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மக்களின் பங்களிப்பு அவசியம். ஆங்கில மருத்துவத்திற்கு முன்பே தமிழ் மருத்துவம் தோன்றி விட்டது. டெங்குவை ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சிக்கன் குனியா காய்ச்சல் வந்த போது திமுக ஆட்சியில் நிலவேம்பு அளிக்கப்பட்டது. அப்போது கமல் ஏன் பேசவில்லை . எது செய்தாலும், பேசினாலும் குதர்க்கம் காண்பதும், குற்றம் காண்பதும் உள் அர்த்தம் உள்ளதாக தான் கருத முடியும் என்று ஜெயக்குமார் கூறினார்.