Header Banner Advertisement

மேதாவித்தனத்தை மேக்கப்போடு நடிகர் கமல்ஹாசன் வைத்துக்கொள்ள வேண்டுமென ஆலஞ்சியார் அறிவுரை


ACTOR Kamal Haasan R.K Nagar By election Contest

print

மேதாவித்தனத்தை மேக்கப்போடு நடிகர் கமல்ஹாசன் வைத்துக்கொள்ள வேண்டுமென பகுத்தறிவு பேசும் திராவிடனும் கலைஞரின் காதலனுமான ஆலஞ்சியார் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் .

இது குறித்து ஆலஞ்சியார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பண மதிப்பிழப்பிற்கு ஆதரவு தந்தமைக்கு பகிரங்க மன்னிப்பை கோருகிறார் கமல்..

இன்னும் நிறைய இருக்கிறது.. தூய்மை இந்தியா பசுவை கருணையோடு நேசிப்பவர்கள்..

எல்லாம் தெரிந்தவனை போல பேசும் முன் அதை குறித்த அறிவு அவசியம் ..அதுசரி அரசியலுக்கு வருவதற்கு அறிவெதெற்கு என்கிற நிலை.. மகோரா (எம்ஜிஆர்) வரவிற்கு பிறகு ஏற்பட்டதால்..

சாயம் பூசியவர்கள் வெளியில் நடிக்க தொடங்கிவிடுகிறார்கள்..

என்னவொரு அவலம்.. ஆற்றில் நுரை வருவது சோப்பு போட்டு குளிப்பதால் என்கிறவர்களை அமைச்சர்களாக்கியதின் விளைவு யார் வேண்டுமானாலும் வெட்கமின்றி எதுவும் பேசலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறது..

பாஜகவினரின் ரத்தம் பாரத ரத்தமென்கிற கொடுமையெல்லாம் கேட்டு சகிக்க வேண்டியிருக்கிறது..

இதோ ..பாரத பிரதமரே.. GST குறித்து நானென்ன பொருளாதாரம் தெரிந்தவனா தனியாக முடிவெடுக்க காங்கிரஸும் கூட்டாளி என்று கதவை சாத்த பார்க்கிறார்..

காங்கிரஸ்18% விழுக்காடுக்கு மேல் போககூடாதென்றும் தேவையில்லையெனில் மாநிலங்கள் விலக்கு பெறலாம் என்ற போதுகூட குஜராத்தில் அமர்ந்துக்கொண்டு என் பிணத்தின் மீதுதான் GST குஜராத்தில் கொண்டுவர முடியுமென வசனம் பேசியது யார்..?
..
தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை தூக்கிவந்து (show) காட்சி தந்தால் இந்தியா தூய்மையாகிவிடும் என நம்புகிற அரசியல் அறிவுதான் கமலுடையது .. களநிலவரம் அறிதல், சாமானியரை பற்றிய சிந்தனை, குழப்பில்லாத பாதை தெளிவான நோக்கம் இவையெல்லாம் வேண்டும் அடுத்தபடம் பிரச்சனை இல்லாமல் வரவேண்டுமென்பதற்காக வளைந்து நிற்பதல்ல.. கமலிடம் காண்பது

முதிர்ச்சியின்மை மட்டுமல்ல.. மூலம் எதுவென்றும் புரியாமை..

ஒருமுறை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கமலிடம் அதிமேதாவித்தனத்தை திரையில் காட்டாதே என்றார்.. ஆம் மேதாவித்தனமாக காட்ட நினைத்தால் வீழ வேண்டிவரும் இது அரசியலுக்கும் பொருந்தும்.. பாமரனின் தெளிவு மேதாவிகளாக எண்ணிக்கொண்டிருப்போரிடம் இருக்காது..

அரசியலில் ஜனநாயகமென்பது எந்தளவிற்கு தேவையென்பதை நேருவின் பதிலே போதும்.. படிக்காதவர்களுக்கு வாக்குரிமை தராதே என்று ஆங்கிலேயன் சொன்னபோது அவர்களும் தான் என்தேசமென்றவர்.. அவர்கள்தான் சிறந்த ஜனநாயகவாதிகள்..

ஆம்..

அறியாமை அல்ல அவன் எல்லாம் அறிந்தவன் ஆனால் எல்லாமறிந்தவன் என சொல்பவனை விட நன்கு உணர்ந்தறிந்தவன்.. சாமானியனை புறம் தள்ளிய எதுவும் நிலைத்திடாது.. அவன்
மௌனமாய் நகர்கிறானெனில் அதில் ஆயிரம் பொருளுண்டு .. மேதாவிகள் வேசம் கட்டுவோரே.. சாமானியரின் அறிவுமுன் நீங்களெல்லாம் சுன்னம்

(0)

மேதாவித்தனத்தை மேக்கப்போடு வைத்துக்கொள்ளுங்கள்.. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கமல் என்று ஆலஞ்சியார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார் .