பிரதமர் மோடியின் பதவிக்கு வேட்டு வைக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி !


mamata-banerjee-chief-minister-narendra-modi-post-prime-minister-to-torpedo

print

பிரதமர் மோடியை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதில் அத்வானியோ அல்லது அருண் ஜெட்லியோ அல்லது ராஜ்நாத் சிங்கோ பிரதமர் பொறுப்பை ஏற்க குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜி உதவி செய்ய வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும். மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். மோடி பதவி விலக வேண்டும். திட்ட கமிஷன் போன்ற பல காலமாக இருந்த அமைப்புக்களை கலைத்த இது போன்றதொரு பழிவாங்கும் அரசை நான் பார்த்ததில்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில் வேறொரு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தலைவர் தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமை தாங்கட்டும்.அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைப்பது குறித்த கருத்தை வலியுறுத்த வேண்டும். நமது அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைப்போம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி தேசிய அரசை அமைப்போம். மத்தியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைவதற்கான சரியான நேரம் இது தான். குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.