Header Banner Advertisement

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்


Medha Patkar

print
அவதுாறு வழக்கில் ஆஜராகாத, சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு, புதுதில்லி நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர், வி.கே. சக்சேனா மீது,கடந்த சில மாதங்களுக்கு மேதா பட்கர் புதுதில்லி நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், பலமுறை நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியும், மேதா பட்கர் ஆஜாராகாததால், அவருக்கு, நீதிபதி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார் .மேலும்
 
அடுத்த வாய்ப்பில், மேதா பட்கர் ஆஜராகாவிட்டால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும்’ என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் .