Header Banner Advertisement

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க பாஜகவின் மோடி அரசு மறுப்பு 


defult-img

print


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்த விபரங்களை , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பதில் அளிக்க பாஜகவின் மோடி அரசு மறுத்துள்ளது

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் பிரதமர் மோடி , கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில் அந்த நோட்டுகள், அவ்வப்போது அழிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி, திடீரென நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், இது பற்றி, மத்திய நிதியமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா’ என, ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் அலுவலகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், ‘செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்த விபரங்களை, ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் தெரிவிக்க முடியாது’ என, ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டன.

த்த மத்திய நிதியமைச்சகத்துக்கு, பி.டி.ஐ., செய்தி நிறுவனம், ஆர்.டி.ஐ.,யின் கீழ் கேட்டிருந்த கேள்வியில், ‘செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், இது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்கப்பட்டதா’ என, கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு பதில் அளிக்க, மத்தியநிதியமைச்சகம் மறுத்து விட்டது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது :-

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. ஆனால், இவை, ஆர்.டி.ஐ., கீழ் வராது; அதனால், அந்த தகவல்களை தெரிவிக்க முடியாது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.