முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் படி காஜிக்கள் ‘தலாக்’ வழங்க உயர்நீதிமன்றம் தடை !


Muslim personal law divorce court banned kajikkal

print

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்தப் பிரிவுகளில் கோர்ட் தலையிட முடியாது’ என, முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன், இது தொடர்பாக, நாடு முழுவதும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில் அதிமுக.,வை சேர்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பின பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது :-

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் படி முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்ரவரி 21 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர். மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்னர் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.