Header Banner Advertisement

அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் அரசு போக்குவரத்து கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஏழு பேர் பலி


nagai government transport building roof kill

print

அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் செயல்பட்டுவரும் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் போக்குவரத்து கழக ஊழியர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் . கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்பட பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்னர்

இடிபாடுகளில் சிக்கியுள்ள 20-க்கு மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது