Header Banner Advertisement

10 நாடுகளின் மக்கள் தொகையை புதுதில்லி நகரின் மக்கள் தொகை தாண்டியதாக தகவல்


New Delhi has population 10 countries across population

print

புதுதில்லி நகரின் மக்கள் தொகை உலகில் உள்ள 10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டி விட்டது என ஐக்கிய நாடுகள் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ளது

இது குறித்து ஐக்கிய நாடுகள் சர்வேயில் கூறியுள்ளதாவது :-

இந்தியாவின் தலைநகரான புதுதில்லி நகரின் மக்கள் தொகை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2.5 (25 மில்லியன்) கோடி ஆக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 3.6 (36 மில்லியன்) கோடியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் உலகில் உள்ள 10 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும்  புதுதில்லி மக்கள் தொகை கூடுதலாக இருக்கிறது எனவும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சர்வே படி நியூசிலாந்தில் 4.471 மில்லியன், நார்வேயில் 5.084 மில்லியன், பின்லாந்தில் 5.4 மில்லியன், இஸ்ரேலில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 8.059 மில்லியன், சுவிட்சர்லாந்தில் 8.801 மில்லியன், சிங்கப்பூரில் 9.346 மில்லியன், ஜிம்பாப்வேயில் 14.15 மில்லியன், நெதர்லாந்தில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 16.8 மில்லியன், இலங்கையில் 2012-ன் கணக்கெடுப்பின் படி 20 மில்லியன், தைவான் நாட்டின் மக்கள் தொகை 23.37 மில்லியன் ஆகவும்,உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சர்வே தகவல் கூறுகிறது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.