பாகிஸ்தான் நடத்திய நீர்மூழ்கி அணுஆயுத ஏவுகணை பரிசோதனை வெற்றி


pakistani-submarine-nuclear-missile-test-success

print

பாகிஸ்தான் நடத்திய பாகிஸ்தான் நடத்திய நீர்மூழ்கி அணுஆயுத ஏவுகணை பரிசோதனை
வெற்றிகரமாக முடிந்து ள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூற ப் பட்டுள்ளதாவது :-

நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தக்கூடிய பாகிஸ்தானின் முதல் ஏவுகணையான ‛பாபர்-3′ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வெடி பொருளை சுமந்து பாயும் இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ., தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. நிர்ணயித்த இலக்கை ‛பாபர்-3′ கடலுக்கடியிலிருந்து சரியாக தாக்கி அழித்தது. இது பாக்., ராணுவத்தின் மைல்கல்லாக அமைந்தது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் முப்படைத் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சோதனை எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.